சூர்யாவின் “கர்ணா” மகாபாரத கதை.. பெரிய பட்ஜெட் பாலிவுட் படம் .. 2 பாகங்கள்.. சூர்யாவின் மாஸ் திரைப்படம்..!


நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பதை பார்த்தோம்.
குறிப்பாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ திரைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’ரோலக்ஸ்’ மற்றும் ’இரும்புக்கை மாயாவி’ உள்பட ஒரு சில படங்களில் அவர் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா நேரடியாக நடிக்க இருக்கும் பாலிவுட் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மகாபாரதத்தில் உள்ள கர்ணன் கேரக்டரை கதை அம்சமாக கொண்டு ’கர்ணா’ என்ற படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் என்ற பாலிவுட் இயக்குனர் இயக்க உள்ளார் என்பதும் இரண்டு பாகங்களில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா இந்த படத்தில் கர்ணன் கேரக்டரில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சிவாஜி கணேசன் கர்ணன் என்ற கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது சூர்யாவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும் தமிழ், ஹிந்தி உள்பட இந்தியாவின் பல முக்கிய மொழிகளில் இந்த படம் உருவாகும் என்று கூறப்படுகிறது.