‘தக் லைஃப்’ விவகாரம் – கமலிடம் சாரி கேட்ட துல்கர்


மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தில், திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிக்க இருந்தனர். ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக தற்போது படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் விலகிவிட்டனர். இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்த துல்கர் சல்மான், மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். அப்போது, தான் படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை எடுத்துக் கூறி மண்ணிப்புக் கேட்டுள்ளார்.