தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் ..’கஞ்சா கேஸ் போட்ருவேன்..’ இளம்பெண்ணை கதற கதற சீரழித்த காவலர்கள்..

May 14, 2022 at 7:39 am
pc

கிருஷ்ணகிரி மாவட்டம், பீமாண்டப்பள்ளிப் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து தாபா உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்தப் பெண் கடந்த வாரம் 4-ஆம் தேதி சூளகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்கள் தன்னை மிரட்டி உடலுறவு வைத்ததாக ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் “சூளகிரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் முருகானந்தம் மற்றும் மாரியப்பன் இருவரும் தான் நடத்தி வரும் உணவகத்திற்கு அடிக்கடி வந்து சாப்பாடு வாங்கி செல்வார்கள். இருவரும் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள் பணம் தரவில்லை என்றால் தாபா உணவகத்தில் கர்நாடக மாநில மது பானங்களையும், கஞ்சா பொட்டலங்களை வைத்து வழக்குப்பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி இருவரும் தன்னை பலாத்காரம் செய்துவிட்டனர். எனவே என்னை மிரட்டி பலாத்காரம் செய்த இரு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

பெண்ணின் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார் காவலர்கள் முருகானந்தம், மாரியப்பன் இருவர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலாத்காரம் செய்தல் IPC 376(2), மிரட்டல் விடுத்தல் 506(1) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது போல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே இது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை மீது லஞ்சம், லாக்கப் டெத் மரணங்கள் தொடர்பாக பல்வேறு பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website