தளபதி வெறியர்கள் செய்த மோசமான செயல்..இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

மிஸ்கின்
இயக்குனர் மிஸ்கின் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மாவீரன் படம் வெளிவந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் மிஸ்கின் நடித்துள்ளார். நேற்று லியோ படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்விட்டதாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
ஆனால், இதில் நடிகர் விஜய்யை ஒருமையில் பேசினார் என கூறி, மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் செய்த செயல்
இந்த பதிவில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது.