திடீரென இணைந்த அனிருத் – ஜடேஜா கூட்டணி.. என்னவா இருக்கும்?
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த புகைப்படம் எதற்காக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கிய நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது என்பதும் இந்த போட்டியில் பெங்களூரு அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியது என்பது தெரிந்ததே. மேலும் வரும் 26 ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே மோத இருக்கும் நிலையில் தற்போது சிஎஸ்கே அணி சென்னையில் தான் தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் எதற்காக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை அணிக்கான சிறப்பு பாடலை அனிருத் கம்போஸ் செய்ய இருக்கின்றாரா? அல்லது அனிருத், ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து ஏதாவது விளம்பர போட்டோஷூட் நடக்கிறதா?என்பது சீக்கிரம் தெரிந்துவிடும் என்றாலும் இப்போதைக்கு அனிருத் இதனை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளார்.
ஆனால் எதுவாக இருந்தாலும் அனிருத் மற்றும் ஜடேஜா இணைந்தால் அது சூப்பராவே இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.