தேர்தல் வெற்றிக்கு விஜய் சொன்ன வாழ்த்து!

நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கிய பிறகு பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து தெரிவிக்கிறார், அடிக்கடி அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறார். இன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் விஜய் தற்போது இருவருக்கு வாழ்த்து சொல்லி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகும் திரு சந்திரபாபு நாயுடு, மற்றும் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருக்கும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கும் விஜய் வாழ்த்து கூறி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.