நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு மீண்டும் ஆண் குழந்தை … குவியும் வாழ்த்துக்கள்!

June 4, 2024 at 10:24 am
pc

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமா துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் இவர். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.

பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதற்கு முன்னாள் சில விளம்பரங்களிலும், படங்களிலும் தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமானார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.

தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுற்றி அடித்தபோதிலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனது குடும்பத்துடன் அழகாக நடத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

மனைவி, மகள் ஆராதனா, மகன் குகன் தாஸுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் பகிர்வதுண்டு.

சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி தங்களது மூன்றாவது குழந்தையை வரவேற்கவுள்ளனர் என்ற தகவல் இணையத்தில் வைரலானது. 

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில், வெளியான தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

தற்போது, தனது மூன்றாவது குழந்தை குறித்த மகிழ்ச்சியான செய்தியை தனது X பக்கத்தில்  நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். 

குறித்த பதிவு தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. 

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website