நெய் தயாரிப்பது இவ்ளோ ஈஸியா …வீட்டிலேயே சுலபமான முறையில் நெய் தயாரிக்கலாம் வாங்க ….!!

October 4, 2022 at 4:59 pm
pc

அந்தக் காலத்தில் எல்லாம் நெய்யை வீட்டிலே தான் காய்ச்சுவார்கள். அதற்கான வேலை முறை சற்று கூடுதல் தான் என்றாலும் நாம் வீட்டிலே எடுக்கும் நெய் மிகவும் சுத்தமாகவும், அதே நேரத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும். இவை அனைத்திலும் விட பணத்தை பெரிதும் மிச்சப்படுத்தலாம். நெய்யின் விலை எவ்வளவு அதிகம் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். இந்த நெய்யை காய்ச்சுவதற்காக நாம் தனியாக எந்த பொருளும் கடையில் வாங்க போவதில்லை. நம் வீட்டில் காய்ச்சும் பாலின் மேல் படியும் அந்த பாலாடையை சேகரித்து வைத்தாலே போதும் நம் வீட்டிற்கு தேவையான நெய்யை நாமே உருக்கி எடுத்து கொள்ளலாம். இதற்கான வேலை முறைதான் சற்று அதிகம். ஆனால் உடலுக்கும் நல்லது பணத்தையும் மிச்சப்படுத்தலாம் என்றால் சிறிது மெனக்கெடுவதில் தவறு ஒன்றும் இல்லை தானே. சரி வாருங்கள் வீட்டிலேயே நெய் காய்ச்சுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இதற்கு முதலில் நாம் தினமும் காய்க்கும் பாலின் மேல் படியும் ஆடையை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைக்க வேண்டும். பாலை காய்ச்சியவுடன் மேலே ஒரு தட்டு வைத்து மூடி விடுங்கள். மூடி முழுவதுமாக மூடக்கூடாது லேசாக ஆவி வெளியேறு படி மூட வேண்டும். இப்படி செய்தாலும் பாலாடை அதிகமாக சேரும். இன்னும் அதிகம் பாலாடை உங்களுக்கு வேண்டுமென்றால் பால் ஆறியதும் எடுத்து பிரிட்ஜில் மூடி வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்துப் பார்த்தால் இன்னும் திக்கான பாலாடை உங்களுக்கு கிடைக்கும். இது நீங்கள் அன்றாடம் வீட்டிற்கு பயன்படுத்தும் பாலிருந்துதே பாலாடை எடுக்கலாம்.

இப்படி நீங்கள் தினமும் எடுத்து வைக்கும் இந்த பாலாடையை ஒரு சில்வர் டப்பாவில் போட்டு மூடி ஃப்ரீசரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் ஆனதும் உங்களுக்கு போதுமான அளவு பாலாடை சேர்ந்து இருக்கும். ஆனால் இதை கட்டாயமாக ஃப்ரீசரில் தான் ஸ்டோர் செய்ய வேண்டும். இதை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் பாலாடை உருக்குவதற்கு குளிர்ந்த நீர் தேவைப்படும் எனவே இந்த நெய்யை காய்ச்சும் போது குளிர்ந்த நீரை பிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் சேர்த்து வைத்த பாலாடையை நெய் உருக்குவதற்கு ஒரு இரண்டு மணி நேரம் முன்பாகவே எடுத்து வெளியில் வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக குளிர்ந்த நீரை ஊற்றி மிக்ஸியில் அரைத்து எடுத்தால் தண்ணீர் தனியாகவும் வெண்ணை தனியாகவும் திரண்டு வந்திருக்கும். ஒரு வடிகட்டி வைத்து வடித்து விட்டால் அதிலிருந்து தண்ணீர் தனியாக பிரிந்து கட்டியாக வெண்ணெய் கிடைக்கும். அதை உங்கள் கைகளில் எடுத்து ஒரு பந்து போல உருட்டிக்கொள்ளுங்கள். இதன் பிறகு இன்னும் இரண்டு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த வெண்ணையை மேலே லேசாக தேய்த்தால் மீதம் இருக்கும் தண்ணியும் வந்துவிடும். இதே போல் அடுத்த கிண்ணத்தில் உள்ள தண்ணீரிலும் இந்த வெண்ணையை போட்டு எடுங்கள். அதாவது இரண்டு முறை இப்படி குளிர்ந்த நீரில் போடும் போது அந்த வெண்ணை மீது இருக்கும் கொஞ்சம் பால் தண்ணீரும் வெளியேறி சுத்தமாகிவிடும் அதற்காகத்தான் இந்த முறை.

ஒருஅடி கனமான ஒரு பேனை எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து பேன் நன்றாக சூடானவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விடுங்கள். இப்போது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் வெண்ணையை அந்த பேனில் போட்டு விடுங்கள். வெண்ணை லேசாக அப்படியே உருகி வரும். நீங்கள் ஒரு ஸ்பூனோ, கரண்டியோ வைத்து அதை கிளறிக் கொண்டு இருங்கள். இதில் வெண்ணையும் கலந்து இருப்பதால் மேலே வெள்ளையாக நுரை போல் பொங்கி வரும். நீங்கள் மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கும் போது அது அப்படியே அடங்கிவிடும். இதில் இரண்டு கல் உப்பையும் சிறிது வெந்தயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது அந்த நெய்க்கான நிறத்தையும் மணத்தையும் கொடுப்பதோடு நீண்ட நாள் நெய் கெட்டுப் போகாமல் இருக்க இது உதவும்.

மேலே வெள்ளையாக பொங்கும் நுரையெல்லாம் அடங்கி முடிந்து முழுவதும் எண்ணெய் போல வந்தவுடன் சிறிது முருங்கை இலையை அதில் போட்டு விடுங்கள். அப்போது நெய் முறிந்து விடும். அவ்வளவுதான் முருங்கை இலை போட்டு ஒரு நிமிடம் வரை இருந்தாலே போதும். பேனை இறக்கி அப்படியே ஆற வைத்து வேறு ஒரு கிண்ணத்தில் வடிகட்டி நெய்யை தனியே எடுத்து வைத்து விடுங்கள்.

இதை ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழித்து பார்த்தால் நீங்கள் கடைகளில் வாங்கும் நெய்யை போலவே மணல் மணலாக மஞ்சள் நிறத்தில் அவ்வளவு மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website