பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை

வடகொரியா, பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்குள் மனிதக்கழிவுகளைக் கொண்டு இறக்கிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காற்றில் பரவும் மனிதக்கழிவுகளால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறித்து எச்சரித்துள்ளார் பிரித்தானிய மருத்துவர் ஒருவர்.
தென்கொரியாவில் வந்திறங்கிய 260 ராட்சத பலூன்கள்
வடகொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட பலூன்களுடன், மலம் மற்றும் குப்பை அடங்கிய 260 மூட்டைகள் தென்கொரியாவில் வந்திறங்கியுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் மேலும் வலுவடைந்துள்ளது.