பாகிஸ்தான் வீரரை உருவ கேலி செய்த நியூசிலாந்து டிஜே.., கொந்தளிக்கும் ரசிகர்கள்

January 18, 2024 at 9:46 pm
pc

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் வந்த போது WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்கப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

நியூசிலாந்து Vs பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜன.17) நடைபெற்ற போட்டியிலும் தோல்வி அடைந்தது.நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

WWE மல்யுத்த வீரரின் என்ட்ரி மியூசிக்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 -வது டி20 போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கான் பேட்டிங் செய்ய கிரீஸுக்கு வந்தார். அப்போது, யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்க ஆரம்பித்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website