பிரமாண்டமாக நிகழும் அம்பானி வீட்டு திருமணம்: பிரபல பாப் பாடகியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

June 3, 2024 at 11:19 am
pc

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கான முந்தைய நாள் கொண்டாட்ட விழாவில் பிரபல பாப் பாடகிக்கு வழங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் (Radhika Merchant) ஜூலை 12 ஆம் திகதி திருமணம் நிகழவுள்ளது.

இதற்காக பெருமளவில் செலவழித்து திருமணத்திற்க முந்தைய நாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தற்போது இரண்டாம் கொண்டாட்ட விழா நடுக்கடலில் நிகழ்ந்து வருகிறது.

குறித்த உல்லாசக் கப்பல் இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் தனது பயணத்தை முடிக்கும்.

இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். விருந்தினர்களை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பிரபல பாப் பாடகி ஷகிரா (Shakira) இந்நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு கோடி கணக்கில் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பயணக்கப்பலில் ஷகிரா தனது பிரபலமான வெற்றிப் பாடல்களை பாடி வருகிறார். ஷகிராவின் பாடலுக்கும் நடனத்திற்கும் அவர் ரூ.10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெப்ரவரி மாதம் ஜாம்நகரில் நிகழ்ந்த விழாவிற்கு ரிஹானா ரூ 74 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும் சிறப்பான பாடல்களை பாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website