பெரும் அதிர்ச்சி! கள்ளக்குறிச்சியில் பரவும் எலிக்காய்ச்சல்-7 பேர் கண்டுபிடிப்பு..

July 9, 2024 at 10:37 am
pc

கள்ளக்குறிச்சி பகுதியில் சிலருக்கு எலிக்காய்ச்சல் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் எலிக்காய்ச்சல்

கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி அருகில் உள்ள வடதொரசலூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  

7 வயது சிறுவன் குபேரன், சுபானி, வெற்றிவேல், பிரபாவதி, கலைவாணன் மற்றும் திவ்யா போன்றவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நினைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வந்துள்ளனர்.

பின்னர் கடந்த 3 ஆம் திகதி தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் மருத்துவ முகாமிட்டு இரத்த பரிசோதனை செய்துள்ளனர். 

குறித்த இரத்த பரிசோதனையின் முடிவில் 7 பேர் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியானது.

உடனே பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர் சிகிச்சையின் பின்னர் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஏனையவர்கள் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website