பொறி பறக்கும் லியோ படத்தின் புது போஸ்டர்!
விஜய் நடித்து இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனால் படத்தின் டீஸர் ட்ரைலர் உள்ளிட்டவை எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ரசிகர்களுக்காக ஒரு புது போஸ்ட்டரை இன்று மாலை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
சரியாக 6 மணிக்கு லியோ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
தீப்பொறி பறக்கும் அந்த போஸ்ட்டரை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.