மார்க் ஆன்டனி வெற்றி! மக்களுக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த விஷால்…

மார்க் ஆண்டனி
விஷாலின் மாறுபட்ட நடிப்பில் நேற்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, அபிநயா, சுனில், செல்வராகவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான மார்க் ஆண்டனி முதல் காட்சியில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
இந்நிலையில், தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது விஷாலின் கெரியர் பெஸ்ட் ஓப்பனிங் வசூல் என்கின்றனர்.
இந்த வார இறுதியில் கண்டிப்பாக ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. இது விஷாலின் செம மாஸ் கம் பேக் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..