மாலை நேரத்தில் தேநீர் குடிப்பவரா நீங்கள்? இதோ உங்களை தேடி வரும் ஆபத்து

தலைவலி, வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், மாலை பொழுதை இனிமையாக கழிக்க வேண்டும் என்பற்காக தேநீர் குடிப்பது வழக்கம்.
ஒவ்வொரு இந்திய வீட்டிலும் மாலை நேரத்தில் தேநீர் குடிப்பது என்பது இன்றியமையாத செயலாகும். ஒரு சிலருக்கு அவர்களுடைய நாள் தேநீர் இல்லாமல் ஆரம்பிக்கப்படுவதில்லை.
தேநீர் அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆனால் காலையிலும் மாலையிலும் தேநீர் அருந்துவது பல்வேறு வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரியாமல் குடிக்கின்றனர்.
அந்தவகையில் மாலை நேரத்தில் தேநீர் குடிப்பது யாருக்கு எல்லாம் கேடு விளைவிக்கும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
- இரவு 11-12 மணிக்கு தூங்கினால், மதியம் 2 மணிக்குப் பிறகு நீங்கள் டீ அல்லது காபி சாப்பிடக்கூடாது.
- மாலையில் தேநீர் அருந்தினால் கல்லீரல் சரியாக நச்சு நீக்கம் செய்ய முடியாமல் சிரமப்பட வைக்கும்.
- இரவில் தூங்குவதில் சிரமம் ஏற்படுபவர்கள் மாலையில் தேநீர் அருந்தக் கூடாது.
மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது பதட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதை தவிரித்துக்கொள்ளவும்.
வயிற்றில் வாயு அதிகமாக இருப்பவர்களும், சருமம் மற்றும் முடி வறண்டவர்களும் இதை குடிப்பதை தவிர்க்கவும். - உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருந்தால் குடிக்கக் கூடாது.
உடல் எடையானது குறைவாக காணப்பட்டாலும் நீங்கள் மாலை நேரத்தில் தேநீர் குடிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.