யாருக்கும் தெரியாத சில்க்கின் இன்னொரு முகம்!

December 4, 2023 at 8:35 am
pc

மரணித்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் கூட ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது சில்க்காக மட்டும் தான் இருக்க முடியும். இதற்கு சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படமே ஒரு சாட்சி. சில்க் சாயலில் இருக்கும் அந்த நடிகையை நிஜ சில்க்காகவே கொண்டாடி வருகின்றனர்.

அதுதான் அந்த 3 எழுத்து மந்திரத்தின் பவர். அந்த வகையில் ஒட்டுமொத்த திரையுலகையே தனக்கு அடிமையாக கட்டுப்போட்ட பெருமையும் இவருக்கு உண்டு. அதனாலேயே அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கூட யார் அந்த சில்க் என்று கேட்டாராம். இதுதான் அவருடைய வெற்றிக்கான அடையாளம்.

போதை ஏற்றும் கண்கள், அசர வைக்கும் நடனம் என கவர்ச்சியில் வித்யாசத்தை காட்டிய இவருக்கு நடிப்பு திறமையும் உண்டு. இதற்கு அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்கள் உதாரணமாக இருக்கிறது. இப்படி கொண்டாடப்படும் சில்க்கிற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அதாவது இவருக்கு ஒரு நக்சலைட் ஆக வேண்டும் என்பது பெரும் ஆசை இருந்திருக்கிறது.

புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகைக்கு இப்படி ஒரு ஆசை வந்தது ஆச்சரியம் தான். ஆனால் இதை அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். மேலும் அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மக்களை விட அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்று கூறி இருக்கிறார்.

இதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு தனக்கான ஒரு சுதந்திர வாழ்க்கையை வாழ விரும்பி இருக்கிறார் என்பது தெரிகிறது. அதே போன்று தான் பிறந்த ஊரில் கஷ்டப்படும் மக்களுக்கு இவர் அள்ளி அள்ளி பணத்தை கொடுத்து உதவியும் செய்து இருக்கிறார்.

அவர்களுக்கு மட்டுமல்லாமல் தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட சில்க் உச்சகட்ட மன அழுத்தத்தில் தன் இறுதி முடிவை தேடியது காலத்தின் கொடுமை. அவருடைய மரணத்திற்கு பின்னால் பல மர்மங்கள் இருந்தாலும் இப்படி ஒரு நடிகை இனிமேல் வரப்போவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website