‘ராயன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்.. இதற்கு முன் தனுஷின் ‘ஏ’ சான்றிதழ் படங்களின் லிஸ்ட்..!


தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தனுஷின் ’ராயன்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதை அடுத்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ‘யூஏ’ சான்றிதழ் வாங்க படக்குழுவினர் முயற்சிக்கவில்லை என்றும் ‘ஏ’ சான்றிதழில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே தனுஷ் நடித்த ’துள்ளுவதோ இளமை’ ’காதல் கொண்டேன்’ ’அது ஒரு கனாக்காலம்’ ’புதுப்பேட்டை’ ’பொல்லாதவன்’ ’வடசென்னை’ ‘அசுரன்’ ‘ஜெகமே தந்திரம்’ ஆகிய திரைப்படங்கள் ‘ஏ’ சான்றிதழ் வாங்கி உள்ள நிலையில் தற்போது ’ராயன்’ படமும் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.