வதந்தியால் நகரத்தை விட்டு ஓடிய மக்கள் .. வெறிச்சோடிய நகரம்!!

August 14, 2022 at 7:55 pm
pc

ஒரு வதந்தியை நம்பி நகரத்தையே விட்டு மக்கள் வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா வாசிகளின் விருப்பமான இடத்தில் ஒன்று ஐரோப்பா. இவை இதமான காலநிலை, பழங்கால கட்டிடங்கள், எழில்கொஞ்சும் கடற்கரைகள் என உலக சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்த்துவருகின்றன. இங்கே வரும் பயணிகளை திகைப்பில் ஆழ்த்தக்கூடியவை இங்குள்ள கைவிடப்பட்ட நகரங்கள். இப்படி ஐரோப்பா முழுவதும் பல நகரங்கள் இருக்கின்றன.

அதற்கு பின்னால் பல சுவாரஸ்ய கதைகளும் உள்ளது. அந்த வகையில், ஸ்பெயினில் உள்ள ஒரு நகரம் ஒரு வதந்தியால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் மத்திய மேற்கு பகுதியில், அமைந்துள்ள கிரானடில்லா நகரத்தை 9ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இந்த நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இங்கே வசிக்க துவங்கிய அவர்கள் வேளாண்மையில் ஈடுபட மெல்ல மெல்ல குடியேற்றங்களும் அதிகரித்திருக்கின்றன. இதன் பின் அடுத்த சில அண்டுகளில், நகரம் மக்களிடையே பிரபலமானதாக மாறியிருக்கிறது.

அதனை சுற்றி 17 நகரங்களும் உருவாகியிருக்கின்றன. ஆனால் காலங்கள் செல்ல செல்ல மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளனர். 1950 களில் இந்த பகுதியில் வசித்த மக்களின் எண்ணிக்கை சில ஆயிரம் தான்.

ஆனால், அடுத்த 17 வருடங்களுக்கு உள்ளாக அங்கிருந்த மக்கள் அனைவரும் முழுவதுமாக வெளியேறிவிட்டனர். இதற்கு காரணமே ஸ்பெயினை அப்போது ஆண்டு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோ (Fransisco Franco) என்னும் சர்வாதிகாரிதான்.

மேலும், பிரான்ஸிஸ்கோ அப்பகுதியில் கேப்ரியல் ஒய் காலன் எனும் நீர்த்தேக்கத்தை கட்டினார். அதன் நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் இந்த நகரம் இருந்ததால் இங்கே இருக்கும் மக்களை வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தொடர்ந்து, காலங் காலமாக வாழ்ந்து வந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார்கள். ஆனால், நீர்த்தேக்கம் கட்டப்பட்டுவிட்டால் மொத்த நகரமும் நீருக்குள் மூழ்கிப்போகும் என்பதால் மக்கள் அனைவரும் அப்பகுதியை காலி செய்திருக்கிறார்கள்.

அதன்பின் மனிதர்களே இல்லாத நகரமாக மாறியிருக்கிறது கிரானடில்லா. ஆனால் அரசு எச்சரித்ததுபோல் இந்நகரம் மூழ்கவில்லை. ஏனென்றால் அணை அமைந்திருந்த இடத்தை காட்டிலும் இந்த பகுதி மேடாக இருந்ததால் இந்த நகரம் பாதுகாப்பாகவே இருந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இப்படியே இருந்திருக்கிறது. இன்றும் இந்த நகரத்தில் யாரும் வசிக்கவில்லை. சுற்றுலாவாசிகள் இந்த நகரத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website