வனிதா 4வது திருமணம்: காரி துப்பும் தங்கச்சி!

March 30, 2024 at 12:14 pm
pc

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. அந்த வகையில் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்த மூத்த மகள் வனிதா விஜயகுமார் தமிழ் திரையுலகில் நடிகையாக களம் இறங்கினார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா விஜயகுமார் போல இவரது நடிப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிய இவர் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் பிக் பாஸ் சீசனை ரிவ்யூ செய்து வெளியிட்டு வருவதோடு அடிக்கடி பேட்டியைத் தந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இவரை அடுத்து இவரது மகளை பிக் பாஸ் சீசன் 7-ல் களம் இறக்கிய இவர் தற்போது தன்னுடைய சினிமா கனவை மகள் மீது திணித்து அவளை ஹீரோயினியாக பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது குடும்பத்தோடு ஒட்டாமல் தனித்து தன் மகளோடு வாழ்ந்து வரக்கூடிய வனிதாவை பார்த்து அவர் தங்கை பேசியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதிலும் நீயெல்லாம் பொம்பளையாடி என்ற கேட்ட கேள்வி ஹைலைட்டாக மாறி இணையங்களில் தீயாய் பரவுகிறது.

இதற்கு காரணம் என்னவென்றால் நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து கொண்டு அந்த திருமண வாழ்க்கைகள் நிலைத்து நிற்காத காரணத்தால் விவாகரத்து செய்தவர்.

இந்த நிலையில் இவர் அண்மையில் நான்காவது திருமணம் குறித்து எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தன்னுடைய நான்காவது திருமணம் விரைவில் நடக்கும் என்பதை இலை மறைவு காய் மறைவாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இவர் நான்காவது திருமணத்தை செய்து கொள்வாரா? அல்லது ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து செய்த தன்னுடைய கணவருடன் சேரப் போகிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

இதனை சமூக ஊடகங்களின் பார்த்து தெரிந்து கொண்ட அவரது தங்கை ப்ரீத்தா கடுமையான கோபத்தில் இருக்கிறார் என்ற விஷயம் இணைய பக்கங்களில் வெளியாகி வருகிறது.

மேலும் இவர் வனிதா விஜயகுமார் பற்றி பேசுகையில் கூட பிறந்த பாவத்திற்காக நீ செய்யும் செயல்களுக்கு எங்களுடைய பெயரும் சேர்ந்து கெடுகிறது. நீ எல்லாம் பொம்பளையாடி என்ற கேட்கக் கூடிய வகையில் உச்சகட்ட கடுப்பில் ப்ரீத்தா இருக்கிறார். இந்த விஷயமானது இணைய பக்கங்களில் தகவலாக வெளி வந்து பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் ப்ரீத்தா விஜயகுமாரின் கோபத்தில் நியாயம் உள்ளதாகவும் அவர் பேசிய பேசு சரி தான் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் தற்போது இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தை தெறிக்க விட்டார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website