வயநாடு நிலச்சரிவுக்கு பாரிய தொகையை வழங்கிய நடிகர் தனுஷ்!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் நிதியுதவி வழங்கியுளள்ளார். வயநாடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த 30ஆம் திகதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாலும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.
இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 418 என்று தெரிய வந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, கேரள முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தமிழ் நடிகர், நடிகைகள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது பங்குக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.