விஜய், அஜித் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் அயலான். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு பெற்று தரவில்லை. சில இடங்களில் நஷ்டங்களை இப்படம் சந்தித்துள்ளது.
இதை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரிசாமி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் எஸ்.கே 21. இப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், வருகிற 17ஆம் தேதி First லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையடுத்து எஸ்.கே. 22 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இப்படத்திற்காக வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எஸ்.கே. 25 திரைப்படம் குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தான் எஸ்.கே. 25வது படத்தை இயக்கப்போகிறாராம்.
மாநாடு திரைப்படம் வெளிவந்த சமயத்தில் இருந்தே, சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் குறித்து பேசப்பட்டு வருகிறது.
தற்போது Goat படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் 25வது படத்தை தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.