ஷங்கர் வீட்டில் நடக்க போகும் கல்யாணம்!

நம்ம ஊரு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் இந்தியன் 2 வருடகணக்காக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் விரைவில் படத்தை வெளியிடப் படகுழு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அதிதி சங்கர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய அக்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித்துடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனால் ரோஹித் நடத்தி வரும் கிரிக்கெட் கோச்சிங் சென்டரில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகள் குறித்து புகார்கள் எழுந்தது. இதனால் ரோஹித் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஷங்கரின் மகள் கணவரை பிரிந்து பிறந்த வீட்டிற்கு வந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் விவாகரத்தும் வாங்கி விட்டார். ஆசை ஆசையாய் மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் அது விவாகரத்தில் முடிந்தது ஷங்கருக்கு கடும் மன உளைச்சலை கொடுத்திருக்கிறது. அதை தொடர்ந்து அவர் தன்னுடைய மூத்த மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்.
அதன்படி தற்போது ஐஸ்வர்யாவுக்கு தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தருண் வேறு யாரும் கிடையாது சங்கரிடம் உதவி இயக்குனராக இருப்பவர் தான். இயக்குனராகும் ஆசையில் இருக்கும் இவர் பாடலாசிரியராகவும், பின்னணி பாடகர் ஆகவும் இருக்கிறார்.
இவரை தன்னுடைய மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து இருக்கும் ஷங்கர் இவர்களின் நிச்சயதார்த்தத்தை மிகவும் எளிமையாக முடித்திருக்கிறார். அந்த போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியாவில் போட்டிருக்கும் அதிதி இந்த நல்ல செய்தியையும் பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.