அச்சத்தில் நடுத்தர மக்கள்!!கனவாகி போன தங்கம்..ரூ.7,000-த்தை நெருங்கிய 1 கிராம்

September 24, 2024 at 3:05 pm
pc

செப்டம்பர் 24ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 22 ரூபாய் அதிகரித்திருந்த தங்கம் விலையில் இன்று 21 ரூபாய் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்தே கொண்டே செல்லும் தங்கம் விலையால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செப்டம்பர் 12-ஆம் தேதி வரையில் சீராக 10 ரூபாய், 20 ரூபாய் என அதிகரித்திருந்த தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் செப்டம்பர் 13ஆம் தேதி அன்று காணப்பட்டது. அதன்படி தங்கம் விலை 120 ரூபாய் வரை அதிகரித்தது. அதிலிருந்து தொடர்ந்து இன்றைய நாள் வரை தங்கம் விலை படிப்படியாக ஏறிக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 7,000 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 7236 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 20 ரூபாய் அதிகரித்து 7,000 ரூபாயை எட்டியுள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 56,000 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 21 ரூபாய் அதிகரித்து 7,636 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 168 ரூபாய் அதிகரித்து 61,088 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 16 ரூபாய் அதிகரித்து 5,734 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 18 கேரட் தங்கம் விலை 128 ரூபாய் அதிகரித்து 45,872 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு 1 கிராம் தங்கம் 585 ரூபாயாக இருந்தது. அப்படியானால் 1 சவரன் 4,464 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்றைய தினம் விலையை சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு கிராம் தங்க நகையே 7,000 ரூபாயை நெருங்கி உள்ளது. தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய எதிர்கால முதலீடாக பலரும் தேர்ந்தெடுப்பது தங்க நகைகளை தான். இது போன்ற குடும்பங்களுக்கு தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி விலை சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 98,000 ரூபாயாக உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website