அடுத்த தேசிய விருதுக்கு தயாராகும் வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி!

July 24, 2022 at 8:49 am
pc

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதைப் பற்றிய எந்த தகவல்களும் இதுவரை இல்லாமல் இருந்தது. தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக வாடிவாசல் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

சூர்யாவின் பிறந்த நாளான இன்று அந்த வீடியோ வெளியாகி இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சூர்யா வாடிவாசல் திரைப்படத்திற்காக மாடுபிடி வீரர்களிடம் எடுத்த பயிற்சிகளின் தொகுப்பாக இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

உயிரை பணையம் வைத்து சூர்யா எடுத்த அந்த பயிற்சி வீடியோ தற்போது பயங்கர வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே சூர்யா மாடுபிடி வீரராக ஆக்ரோஷத்துடன் களமிறங்குகிறார்.

சீறிவரும் காளையை அடக்குவதற்கு தயாராக இருக்கும் சூர்யாவை நோக்கி அந்த காளை வேகமாக ஓடிவரும் அந்த காட்சி பார்ப்பதற்கே மிரட்சியாக இருக்கிறது. அதிலும் சூர்யாவை கிட்டத்தட்ட முட்டும் அளவுக்கு நெருங்கி வருகிறது அந்த காளை.

அந்த தாக்குதலிலிருந்து சூர்யா லாவகமாக சிரித்துக்கொண்டே நகரும் அந்த காட்சியில் அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. கொஞ்சம் அசந்திருந்தாலும் காளை அவரை முட்டி தள்ளி இருக்கும். சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி இருக்கும் இந்த வீடியோ தற்போது அதிக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் சூர்யாவுக்கு இது சரியான பிறந்தநாள் பரிசு என்றும், அடுத்த தேசிய விருதுக்கு அவர் தயாராகி விட்டார் என்றும் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website