அடுத்த படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்கிறேன்: லெஜண்ட் சரவணன் பேட்டி..!
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் 2022 ஆம் ஆண்டு ’லெஜெண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அருள் சரவணன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அருள் சரவணன் ’என்னுடைய அடுத்த படத்தில் நான் மேக்கப் இல்லாமல் நடிக்கிறேன், முழுக்க முழுக்க என்னுடைய கேரக்டர் ஒரு வித்தியாசமான லுக்கில் இருக்கும்.
எனக்கு மட்டுமின்றி இந்த படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்களும் சிறப்பாக நடித்து வருகின்றனர். மக்கள் ரசிக்கும் வகையில் ஒரு ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாகி வருகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்தார்.
பெரிய பெரிய நடிகர்களே மேக்கப் இல்லாமல் நடிப்பதற்கு தயங்கி வரும் நிலையில் ஒரே ஒரு படம் மட்டும் நடித்த அருள் சரவணன் இரண்டாவது படத்திலேயே மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.