அட்லியின் அடுத்த படத்தில் ஹீரோ இவர்தானாம்!!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகியும் அட்லியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் அதே நேரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்கப் போவதாகவும், சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும் சல்மான்கான் – அட்லி இணையும் படத்தில் கமல்ஹாசன் இணைய போவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவல்படி அட்லி அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஆனால் அட்லியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே அவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது தெரியவரும்.