அவதூறு பரப்பி பணம் சம்பாதிக்கும் பைல்வானை கிழித்து தொங்கவிட்ட சுசித்ரா.

June 8, 2022 at 6:20 am
pc

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பாடகி சுசித்ராவை தவறாக பேசிய நிலையில், போன் செய்து சரமாரியாக சுசித்ரா திட்டிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் பயில்வான்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பயில்வான், சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பகிரங்கமாக மீடியாவில் பதிவிட்டு வருகின்றார்.

இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து பல பிரபலங்களை குறித்து அவதூறாக பேசிய பயில்வாலுனுக்கு பல எதிர்ப்புகள், பதிலடி வந்து கொண்டிருந்தாலும் தனது வேலையை தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்.

நான் படுக்கையை பகிர்கிறேனா? பயில்வான் ரங்கநாதனை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா

பாடகி சுசித்ரா
இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் விவாகரத்து விடயத்தினை குறித்து பயில்வான் பேசிய போது பாடகி சுசித்ராவைக் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா தன்னை பற்றி தவறாக பேசிய பயில்வான் ரங்கசாமியை போன் செய்து வெளுத்து வாங்கி இருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பின்னணி பாடகியான சுசித்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதை தான் செய்யவில்லை என்றும் தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website