ஆன்லைனில் ஷாப்பிங் பண்ணும் ஆசையை கட்டுப்படுத்த….

May 3, 2023 at 10:52 am
pc

ஆன்லைனில் செலவழிப்பது மிகவும் எளிமையானது அல்லவா? ஒரு சில கிளிக்குகளில், நீங்கள் விரும்புவதை எல்லாம் வாங்கி விடலாம், அதுவும் அவை ஓரிரண்டு நாட்களில் கையில் கிடைத்துவிடும் என்கிற வாக்குறுதியும் கிடைக்கும். இண்டர்நெட்டும், இ-காமர்ஸ் தளங்களும், உங்கள் எல்லா ஆசைகளையும் உடனடியாக நிறைவேற்றி வைக்கத் தயாராக இருக்கின்றன. இவற்றில் உள்ள வசதி மற்றும் எளிமை என்பதை மறுக்க முடியாது என்றாலும், இதனால் நீங்கள் செலவழிக்கும் அளவு அதிகமாகி விடுவதை யாரும் மறுக்க முடியாது, ஆன்லைனில் வாங்குவது, பல நேரங்களில் கட்டாயமான ஒன்றாக மாறி விடுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங் இப்போதைக்கு நம்மை விட்டு விலகப்போவதில்லை, அதுவும் டிஜிட்டைசேஷன் அதிவேகமாக பரவி வரும் இந்த நேரத்தில், இது நிற்பதற்கு வாய்ப்பு எதுவுமில்லை. ஆனால், சவுகரியமும், எளிமையும் நீங்கள் அதிகம் செலவழிப்பதற்கு காரணங்களாக இருக்க கூடாது. உங்கள் நிதிநிலமையை ஆன்லைன் ஷாப்பிங் பாதிக்கிறது என்றால், அதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும், இதோ அதற்கு உதவும் சில குறிப்புகள்.

விருப்பம் மற்றும் தேவை:
ஏதேனும் ஒன்றை வாங்கியே ஆக வேண்டும் என்று உந்துதல் ஏற்படும்போது, இந்தக் கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: எனக்கு இது நிச்சயமாகத் தேவையா அல்லது இதை நான் விரும்ப மட்டுமே செய்கிறேனா? “’விருப்பம் மட்டுமே, வாங்குவதற்கான முடிவுக்கு காரணமாக இருக்கக் கூடாது,” என்கிறார் நிதி ஆலோசகர் ரேகா மோகன். “ஒரு தேவையின் அடிப்படையிலேயே வாங்க வேண்டும். ஏனென்றால், பத்தில் ஒன்பது பொருட்களை நீங்கள் விரும்ப வாய்ப்புள்ளது ஆனால், ஒன்று மட்டுமே உங்களுக்குத் தேவையானதாக இருக்கக் கூடும்.” உங்களிடம் ஏற்கனவே ஆறு ஜோடி ஷூக்கள் இருந்தால், இன்னொன்றை வாங்குவது அவசியமற்றது என்பதை ஒத்துக் கொள்வீர்கள்தானே?

ஆன்லைனில் தகவல்களை சேமித்து வைக்காதீர்கள்:
ஆன்லைனில் சேமிக்கப்பட்டுள்ள, நிதி தகவல்கள் எதையும் அழித்து விடுங்கள், அதுவும் ஏற்கனவே வாங்கிய ரீடெய்ல் இணையதளங்களில் சேமிக்கப்படும் கிரெடிட் கார்டு போன்ற விவரங்களை அழித்து விடுங்கள். “மீண்டும் கிரெடிட் கார்டை எடுத்து, விவரங்களை நிரப்ப வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே வாங்குவதைத் தடுக்கக் கூடும்,” என்கிறார் ரேகா. கிரெடிட் கார்டு விவரங்கள், கடவுச்சொற்கள், அஞ்சல் முகவரிகள் என்று அனைத்தையும் நீக்கி விடுவது நல்லது.

ஆன்லைனுக்கு என்று தனியாக பட்ஜெட் போடுங்கள்:
ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஒரு பட்ஜெட்டைப் போட்டு, அதை மீறாமல் இருப்பது மிகவும் முக்கியம். மாதம்தோறும் பட்ஜெட் போடுகிறீர்கள் என்றால், அதில் ஆன்லைனில் வாங்குவதற்கும் கொஞ்சம் ஒதுக்கி வைப்பதௌ நல்லது. இதனால் செலவழிப்பதைக் கண்காணிக்க முடியும். “எனக்கு ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பிடிக்கும், ஆனால் ஒரு மாதத்தில் மட்டும் ஆன்லைனில் எவ்வளவு செலவு செய்கிறேன் என்று ஒரு நாள் கணக்கிட்டு பார்த்தேன், அது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது,” என்கிறார் ரச்னா ஐயர். “அது கிட்டத்தட்ட ஒரு லட்சரூபாய்க்கு வந்தது, அது என்னுடைய சம்பளத்தைவிடவும் அதிகமானது. அதனால் இப்போது, ஒரு கிரெடிட் கார்டுக்கு, ஒரு மாதத்திற்கு ரூ.15000 என்ற வரம்பு வைத்திருக்கிறேன். இதனால் நான் எந்த அளவுக்கு, செலவு செய்கிறேன் என்பதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.”எல்லா மெயிலிங் லிஸ்டில் இருந்தும் விலகி விடுங்கள்:
கொஞ்சம் அடிமைப்படுத்தக் கூடிய விஷயம்தான் அல்லவா? தொடர்ச்சியாக அறிமுக விளம்பரங்கள் உங்கள் இன்பாக்ஸில் வந்து கொண்டே இருப்பது, அதைக் கிளிக் செய்தால் உடனே ஒரு பொருளை வாங்கி விட முடிவதும் நல்ல அனுபவமாகத்தான் இருக்கும் அல்லவா? “எனக்கு கிடைக்கும் எல்லா விளம்பர மின்னஞ்சல்களிலும் நான் கிளிக் செய்து கொண்டிருந்தேன்,” என்கிறார் ஊர்மிளா ராமசாமி, டிசைனர். “நான் வாங்கிய சில பொருட்களைப் பொதுவாக நான் ஆன்லைனில் வாங்குவதற்கு விரும்பவே மாட்டேன், ஆனால் விளம்பர மின்னஞ்சல்களால் வாங்கி விட்டிருக்கிறேன்”என்கிறார். உடனடியாக விளம்பர மின்னஞ்சல்களின் அடிப்பகுதிக்கு சென்று, “(அன்சப்ஸ்கிரைப்)uஸீsuதீsநீக்ஷீவீதீமீ’என்பதைக் கிளிக் செய்து விடுங்கள். ஒரு நல்ல சலுகை என்பதாலே வாங்கி விடுவதற்காக உந்துதலை சற்று நேரம் நிறுத்தி வைப்பது நல்லது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website