ஆப்பிள் ஐபோன் வச்சிருக்கீங்களா ?ஆப்பிள் மொபைல்களில் அக்டோபர் மாதத்தோடு வாட்சப் நிறுத்தம். ஏன் தெரியுமா…

September 2, 2022 at 4:05 pm
pc

சமீபத்தில் ஆப்பிள் பயனாளர்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது வாட்சப். அது உங்களுக்கு அதிர்ச்சியான தகவலா இல்லையா என்று நீங்கள் எந்த மாடல் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்தே அமையும். 

ஏனெனினில் குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு மட்டுமே அக்டோபர் 24 முதல் வாட்சப் இயங்காது என அறிவித்துள்ளது.குறிப்பாக iOS 10 மற்றும் iOS 11 ஆகிய OS பயன்படுத்தப்படும் ஐபோன்கள் அனைத்திலும் வாட்சப் இயங்காது என அறிவித்துள்ளது. 

இது குறித்து வாட்சப் தந்து பயனர்களுக்கு அவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டமை அப்டேட் செய்ய சொல்லி தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வருகிறது. அதில் அக்டோபர் 24க்குள் லேட்டஸ்ட் ஆப்பிள் OS அப்டேட் செய்பவர்களுக்கு மட்டுமே வாட்சப் இயங்கும் என்றும் செய்யாதவர்களுக்கு வாட்சப் செயல்படுவதை நிறுத்தி விடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் அவர்களது ஹெல்ப் சென்டரிலேயே ஆப்பிள் ஐபோன் வாட்சப் பயனாளர்கள் கண்டிப்பாக iOS 12 வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. ஆனாலும் அப்டேட் செய்யாதவர்களுக்கு அக்டோபர் 24லிலிருந்து வாட்சப் இயங்காது. அப்டேட் செய்ய முடியாதவர்கள் அவர்களின் டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

யாருக்கெல்லாம் பாதிப்பு?
இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தாலும் அதிலும் நல்ல விஷயம் என்னவென்றால் இரண்டே மாடல் ஐபோன்களுக்கு மட்டும்தான் இந்த சிக்கல். அவை ஆப்பிள் ஐபோன் மாடல் 5 மற்றும் ஐபோன் 5c . இந்த இரண்டு மாடல்களும் இன்னும் iOS 10 மற்றும் iOS 11 அடிப்படையை கொண்டு இயங்குவதால் அவற்றில் வாட்சப் செயல்படாது. 

ஆனால் அக்டோபர் 24க்குள் இந்த பயனர்கள் தங்களது OS ஐ அப்டேட் செய்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. இல்லையென்றால் கண்டிப்பாக வாட்சப் செயல்படாது என்று கறாராக அறிவித்து விட்டது வாட்சப் நிறுவனம்.

எனவே இந்த பயனர்கள் செட்டிங்ஸ் பகுதியில் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் பகுதியில் லேட்டஸ்ட் OS அப்டேட் செய்ய வேண்டும்.
Settings > software update > latest OS

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website