ஆஸ்துமாவால் அவதி படுபவர்களா நீங்கள் ?இதோ உங்களுக்கான பதிவு !

May 19, 2022 at 11:51 am
pc

நுரையீரலுக்குப் பிராண வாயுவை எடுத்துச் செல்லும் நாளங்களை வீங்கவும் சுருங்கவும் செய்வதன் மூலம், இழுப்பு, மூச்சுத் தடை, மார்பு இறுக்கம், இருமல் போன்றவற்றை ஆஸ்துமா நோய் ஏற்படுத்தும்.

மூச்சு செல்கிற பாதையில் ஏற்படுகிற அழற்சியே இந்த நோயை உண்டாக்குகிறது.

ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மூச்சு செல்லும் பாதையானது வீக்கம் அடைந்து, அந்தப் பகுதியில் உள்ள தசைகள் இறுகுகின்றன. இதனால் அங்குப் பிராண வாயு செல்வது குறைகிறது. ஒவ்வாமை, ஒவ்வாமை ஊக்குவிப்பான்கள் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

நுரையீரல், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றது. இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது.

ஆண்களுக்கு அதிகமாக வரக்காரணம் அதிக மன ழுத்தம், கவலை. இதன் காரணமாக முதலில் தலைவலி, தூக்கமின்மை வரும். பின் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், ஆஸ்துமாவாக வருகின்றது.

இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லதாகும். அந்தவகையில் தற்போது ஆஸ்துமாவை கட்டுப்படுத்தக்கூடிய ஆயுர்வேத முறைகள் சிலவற்றை பார்ப்போம்.

  • ஒரு துண்டு இஞ்சி, 2 பூண்டு பற்கள், 2 கிராம்பு ஆகியவற்றை நன்கு தட்டி அதை 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, ஒரு கப் ஆனதும் வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து காலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக் கொள்ளும்போது நுரையீரல் பகுதியில் தேங்கியிருக்கும் நாள்பட்ட சளி மற்றும் கபத்தை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
  • ஒரு டீஸ்பூன் ப்ரஷ்ஷாக அரைத்த இஞ்சியை ஒரு கிளாஸ் பாலில் கொதிக்க வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொண்டால், ஆஸ்துமாவின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
  • ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் கால் ஸ்பூன் திரிகடுகப் பொடி (சுக்கு, மிளகு, திப்பில் சேர்ந்த கலவை) சேர்த்து அதை ஒரு கப் கொதிக்கும் நீரில் கலக்கவும். ஒரு நிமிடம் நன்கு கொதித்ததும் சிறிது தேன் கலந்து குடிக்க ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்.
  • அரை டீஸ்பூன் அதிமதுர பொடியுடன் அரை டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து டீ போல தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் ஆஸ்துமா, மூச்சிரைப்பு போன்ற பிரச்சினைகள் குறையும்.
  • பிரியாணி இலையை எடுத்து மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் பிரியாணி இலை பொடியுடன் 1/4 டீஸ்பூன் திப்பிலி பொடியையும் சேர்த்து 1 டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை எடுத்துக் கொண்டால் நாள்பட்ட ஆஸ்துமாவும் கட்டுக்குள் இருக்கும்.
  • ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு ஸ்பூன் வெங்காயச் சாறு கலந்து அதனுடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து டானிக் போல காலை, மாலை என இரண்டு வேளை குடித்து வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.
    சிறிது கடுகு எண்ணையை எடுத்துக் கொண்டு லேசாக சூடு செய்து மார்புக் கூட்டில் நன்கு தேய்த்து விட வேண்டும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நெஞ்சுக் கூட்டில் தேங்கியிருக்கும் சளியையும் இளகச் செய்யும்.
  • கருப்பு பிசின், கருப்பு திராட்சை, பேரிச்சம் பழம் 1, திப்பில் மற்றும் தேன் ஆகியவற்றை பேஸ்ட் செய்து அதை காலை மற்றும் இரவு தூங்கும்முன் சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சினை படிப்படியாகக் குறையும்.

131314 பகிர்வுகள்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website