இணையத்தில் கசிந்த தளபதி 68 படத்தின் கதை!

October 26, 2023 at 10:12 pm
pc

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யின் 68 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பூஜா வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தில் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி எனப் பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தளபதி 68 படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் டைம் ட்ராவல் கதையில் உருவாகி வருகிறதாம்.

இதன் காரணமாக விஜய் இப்படத்தில் 25 வயது 50 வயது என இரண்டு தோற்றத்திலும் நடிக்கிறாராம். இளமையான விஜய் தோன்றுவதற்காக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website