இந்த கம்பெனி ஷாம்புக்களில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம்-ஷாம்புக்களை திரும்பப் பெற்று வரும் நிறுவனம் !!எச்சரிக்கை

October 28, 2022 at 1:19 pm
pc

ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என அனைத்திற்கும் வெவ்வேறு வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
அந்த வரிசையில் யூனிலிவர் நிறுவனம் தனது சில தயாரிப்புகளை தற்போது திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. Dove, Nexuss, Suave, Tressme, Tigi போன்ற உலர்ரக ஷாம்புக்களை (dry shampoo) யூனிலிவர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 

இந்நிறுவன ஷாம்பு தயாரிப்புகளில், குறிப்பாக டவ் ஷாம்புக்களில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பென்சீன் (Benene) எனப்படும் ரசாயனத்தின் ஆபத்து அதிகம் உள்ளதாக யூனிலிவர் நிறுவனம் கூறியுள்ளது. எனவே, அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட யூனிலிவர் நிறுவன உலர்ரக ஷாம்புக்களை திரும்பப் பெற்று வருகிறது. பென்சீன் அளவை காரணம் காட்டி ஷாம்பூக்கள் திரும்பப் பெறப்படுவது இது முதல் முறையல்ல, ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் P&G தயாரிப்பான Pantene மற்றும் Herbal Essences ஷாம்புக்கள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஷாம்பு பயன்படுத்துவோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website