இனி என் ஆட்டம் வேறமாறி இருக்கும் – ரீஎன்ட்ரீ கொடுக்கும் நித்தியானந்தா

கடந்த சில மாதங்களாக கைலாசாவிலேயே ஒரு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்த அவர் தான் சமாதியில் இருப்பதாக கூறி சீடர்களை நம்ப வைத்து வருகிறார்.
மேலும் தன்னால் பேச முடியவில்லை, எழுதமுடியவில்லை எனக்கூறி செல்போனில் தானே டைப் செய்து முகநூலில் பதிவிட்டு வந்தார். நித்தியானந்தா உயிருடன் தான் இருக்கிறார் என நம்ப வைக்கும் விதமாக ஒருசில புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டன. நித்தியானந்தாவுக்கு உடல்நலக்குறைவு என்ற அனுதாபத்தால் கைலாசாவின் கஜானாவில் சீடர்கள் பணத்தை வாரி இறைத்தனர்.
இந்நிலையில் தற்போது நித்தியானந்தாவின் உடல் நலை குறித்து புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், தற்போதும் ஆழ்ந்த சமாதி நிலையை அனுபவிக்கிறேன். கூடிய விரைவில் என்னுடைய உடலுடன் இணைவேன், வழக்கமான சத்சங்கம் மற்றும் தரிசனங்கள் மீண்டும் துவங்கப்படும் என நித்தியானந்தா கூறியுள்ளார்.