இனி பணம் எடுக்க ஆதார், பான் கார்டு கட்டாயம்-அரசு அறிவிப்பு ..!

May 13, 2022 at 12:11 pm
pc

வங்கிக் கணக்கில் பணம் எடுப்பது, பணம் போடுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. இதன்படி, இனி ஒரு நிதியாண்டில் வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுத்தாலும், பணம் போட்டாலும், பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்த அறிவிப்பை அரசிதழில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் போட்டாலும், எடுத்தாலும் அதற்கு பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயமாக காட்ட வேண்டும்.

புதிய விதிகள்:

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகிய அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்யவும் ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் நடப்பு கணக்கு (Current Account) தொடங்க்கவோ, ரொக்க கடன் கணக்கு (Cash credit account) தொடங்கவோ பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம்.

மேற்கூறிய விஷயங்களில் பரிவர்த்தனையின்போது பான் கார்டு எண் அல்லது ஆதார் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website