இயக்குனர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா இயக்குநர்களுக்கு புது கண்டிஷன்களை போட்டுள்ளதால் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகிறார்களாம் இயக்குநர்கள். பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர். 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்து 3 மாதங்கள் மேல் கடந்த நிலையிலும் நயன்தாரா இன்னும் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்.
இதனால் இவரை வைத்து திரைப்படம் எடுக்க இயக்குநர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திரைப்படத்தில் நடிக்க இவர் இயக்குநர்களிடம் புதுசு புதுசாக ஏற்பட்ட கண்டிஷன்களை போட்டு வருகிறாராம்.
அவர் ஏற்கனவே கமிட் ஆன படங்களிலும் சூட்டிங்கை முடித்து கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். திரைப்பட சூட்டிங்கை யாராவது விரைவாக முடிக்க வேண்டும் என்று கேட்டால் என்னால் இப்போது ஷுட்டிங்கில் பங்கேற்க முடியாது.
உங்களுக்கு அவசரம் என்றால் வேறு யாராவது ஹீரோயினை வைத்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக பேசுவதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமானார் ஆனால் தற்போது அடுத்த வருடம் பார்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாராம்.
இப்படத்தின் ஷுட்டிங்கை நடத்த இயக்குநர் திட்டமிட்டிருந்த நிலையில், படக்குழுவின் தலையில் இடியை இறக்கி உள்ளாராம் நயன்தாரா.
இப்படம் நயன்தாராவின் 75வது படம். மேலும் இப்படத்தில் நடிக்க 10 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.