இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி ..!தங்கம் விலை மீண்டும் அதிரடி சரிவு…

May 11, 2022 at 6:42 pm
pc

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில மாதங்களாகவே போரை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால்,. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை அடுத்தடுத்து உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.59 குறைந்து ரூ.4,787-க்கு விற்பனையாகிறது. 

மேலும், ஒரு பவுனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,296-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,488-க்கு விற்பனையாகிறது.

அதேப்போல் வெள்ளியின் விலை ரூ.1.30 பைசா குறைந்து ரூ.64.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.64,800 ஆக உள்ளது.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website