இளமையாகவே இருக்க வேண்டுமா?அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கோங்க

September 1, 2023 at 10:57 pm
pc

பொதுவாகவே பெண்களும் ஆண்களும் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தான் விரும்புவார்கள். அதிலும், அழகு விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதற்காக பார்லர்கள் சென்று தங்களின் சருமத்தையும் உடலையும் மெருகூட்டிக் கொள்வார்கள். ஆனால் சில இயற்கையான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு எந்த வயதிலும் அழகை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியான உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கீரையில் அதிக வைட்டமின்கள், இரும்புச் சத்து, மக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்திருக்கிறது. இது உங்களின் சருமத்தை பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும்.

ப்ரொக்காலியில் வைட்டமின் சி,கே, நார்ச்சத்து, கால்சியம், நிரம்பியிருக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் வயதைத் தடுக்க உதவும்.

பாதாம், அக்ரூட் பருப்புக்களில் ஒமேகா 3 போன்ற கொழும்பு, வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

பெரிஸ் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி என்பன அடங்கியிருக்கிறது. இது சருமத்தில் ஏற்படும் ப்ரீரெடிக்கல் சேதத்தை எதிர்த்து போராடும்.

பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடலில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறும், அழற்சியைப் போக்கும் மேலும், வயதான அறிகுறிகளை இல்லாமலாக்கும். 

இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக நார்சத்து, வைட்டமின் ஏ,சி, ஈ என்பன இருப்பதால் அவை சருமத்தை சமநிலையை பேணும்.

மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அவை சருமத்தை ப்ரீரெடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும்.

முட்டையில் இருக்கும் இயற்கைப் புரதம் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை பராமரித்து உறுதியாகவும், வயதான தோற்றத்தையும் குறைக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website