இளம் வயதிலேயே இளநரையா …?இளநரை மறைய இதை ட்ரை பண்ணுங்க…!!

June 21, 2022 at 11:16 am
pc

பொதுவாகவே, வயதானவர்களுக்கு இளநரை வருவது இயல்பு. ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே இளநரை வந்துவிடும். இளநரை வரக் காரணம் உங்களுக்கு தெரியுமா? இளம் வயதில் இளநரை வருவதற்கு காரணம் மனஅழுத்தம், டென்சன், ஆழ்ந்த சிந்தனை மற்றும் பல. ஒரு சிலருக்கு பரம்பரை வியாதியாக கூட இருக்கலாம்.

சிலசமயங்களில், நமக்கு டென்சன் ஏற்படும்போது, டீ குடிப்பது வழக்கம். டீ குடிப்பது நல்லது தான், ஆனால் அதிகமாக குடித்தால் உடலில் பித்தம் அதிகரித்து இளநரை வர அதுவே காரணமாகிவிடும். இனிமேல், டீ குடித்தால் ஒரு அளவோடு குடிப்பது நல்லது. நாள் ஒன்றுக்கு 2 முறை குடிக்கலாம். சரி, இப்போது அந்த இளநரையை எப்படி மறைப்பது என்று பார்க்கலாம்.

  • முதலில், பீர்க்கங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் இரண்டு நாட்களுக்கு காய வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர், அதை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதை ஒரு நாளைக்கு முன் சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து, தலைமுடிக்கு தேய்த்து 20 – 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடுங்கள்.
  • இவ்வாறு, வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் இளநரை மறைந்து, இனிமேல் வராமல் தடுக்கும்,
  • மேலும், தலைமுடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website