இஸ்ரேல் – ஹமாஸ் போர் மறைவில் ஈரான் நடத்திய நடுங்கவைக்கும் செயல்: முழு பின்னணி

December 3, 2023 at 9:12 am
pc

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், பெண்கள் மற்றும் பதின்ம வயதினர் உட்பட நூறுக்கும் மேற்பட்டோருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து

ஈரான் மனித உரிமைகள் அமைப்பு சேகரித்த தரவுகளின்படி, இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் மரணதண்டனைகள் நிறைவேற்றுவது அதிகரித்து வந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை தொடங்கி, 24 மணி நேரத்திற்குள் ஏழு பேரை ஈரான் நிர்வாகம் தூக்கிலிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் தெரிவிக்கையில், 

ஈரான் நிர்வாகமனது காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் போரில் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளதை ஒரு மறையாகப் பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களைப் பழிவாங்கவும், உரிய நீதிச் செயல்முறையின்றி மக்களைக் கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் தொடக்கத்திலிருந்து, ஈரானில் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச கவனம் குறைவாகவே உள்ளது, மேலும் மரணதண்டனைகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு ஈரான் நிர்வாகம் உரிய பதில் அளிக்கவும் இல்லை என மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

எண்ணிக்கை 700க்கும் அதிகம்

மேலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பருடன் ஒப்பிடும்போது அக்டோபர் மற்றும் நவம்பரில் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், பெண்கள் மற்றும் பதின்ம வயதினர் உட்பட 127 பேர்களுக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மேலும், அக்டோபர் 7 முதல் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஈரானிய அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை. 

மட்டுமின்றி, நாட்டில் எத்தனை பேர் மரணமடைகிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களையும் ஈரான் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது. அத்துடன், 2023 பிறந்ததில் இருந்து ஈரான் நிர்வாகம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700க்கும் அதிகம் என்றே தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website