“உங்க பொண்ண கல்யாணம் பண்ணிகொடுங்க.. இல்லனா போராட்டம் பண்ணுவேன்”அதிதி ஷங்கருக்கு ஜொள்ளு விட்ட பிரபல நடிகர்.!

August 13, 2022 at 11:57 am
pc

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளார் அதிதி. இந்தப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

‘சுல்தான்’ படத்திற்கு பின் ஒரு வருடங்கள் கழித்து கார்த்தியின் படம் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான ‘கொம்பன்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.

இந்தப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘விருமன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. முத்தையாவின் முந்தைய படங்களை போலவே இந்த பாடமும் எமோஷனல், சென்டிமெண்ட் டிராமாவாக இருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப்படத்தை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், அதிதி ஷங்கரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

உங்க அப்பா படத்துல வர்ற மாதிரி நம்ம காதல் சேரும் என்றும் சிவகார்த்திகேயன் உங்க கூட நடிக்கிறது உங்க அண்ணி பார்த்து நடிங்க என கூறியுள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், கூல் சுரேஷ் எல்லாம் ஆஸ்பத்திரில தேட மாட்டாங்களா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website