உங்க முக கருமையை 5 நிமிடத்தில் வெள்ளையாக்க கற்பூரவல்லி ஃபேஸ் பேக்….

ல்லாப் பெண்களும் பிரச்சனையில்லாத அழகிய முகம் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால், இந்த கால சுற்றுச்சூழலும், உணவு முறைகளையும் அதை முற்றிலும் சேதப்படுத்தி விடுகின்றன. முகத்தில் முகப்பரு, கரும்புள்ளி, கருவளையம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் குணப்படுத்த நிறைய அழகு சாதனப் பொருட்கள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான். அதுமட்டுமல்லாம், அவற்றில் இரசாயனங்கள் தான் இருக்கின்றது என தெரிந்தும் நாம் அதை வாங்கிப் பயன்படுத்துகிறோம். அவை முகத்தில் இருக்கும் பிரச்சனையை இன்னும் தான் அதிகமாக்கும்.
சிலருக்கு முகம் முழுவதும் டல்லாகவே இருக்கும். என்ன கிரீம்போட்டாலும் செட் ஆகாது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த குறிப்பை பயன்படுத்தினால், பளிச்சென்ற பிரகாசமான சருமத்தை பெற உதவும். குறிப்பாக கற்பூரவல்லி இலைக்கு கருமையை போக்கும் தன்மை அதிகளவில் உண்டு. இந்த ஃபேஸ் பேக்கை ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தலாம். சரி இப்போது இந்த கற்பூரவல்லி ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கற்பூரவள்ளி இலைகள் – 5
- தயிர் – 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
- கடலை மாவு – 1 ஸ்பூன்
1. முதலில், கற்பூரவள்ளி இலைகளை எடுத்து தண்ணீரில் கழுவி, ஒரு சிறிய உரல் இருந்தால் அதில் போட்டு விழுதுபோல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இந்த விழுதோடு தயிர், கடலை மாவு, எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.
3. இந்த பேஸ்டை உங்களுடைய முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.
4. நன்றாக காய்ந்ததும் கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, முகத்தையும் நனைத்துக் கொண்டு 5 நிமிடம் லேசாக மசாஜ் செய்யவும்.
5. பின்னர், குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், உங்களுடைய முகத்தில் இருக்கும் தேவையற்ற கருமை படிப்படியாக குறைந்து அழகான, பொழிவான சருமத்தை பெறலாம்.
குறிப்பு: உங்களுக்கு தயிர் செட்டாகவில்லை என்றால் பால் அல்லது ரோஸ் வாட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம். கடலை மாவுக்கு பதிலாக பச்சைப்பயறு மாவு அல்லது கோதுமை மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.