“எது பண்ணாலும் தப்பா ஆகிடுது” – நயன்தாரா வருத்தம்!

December 22, 2022 at 6:50 am
pc

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

கனெக்ட்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நயன்தாரா இந்நிலையில் கனெக்ட் படத்தின் புரொமோஷனுக்காக நயன்தாரா சிறப்பு பேட்டியளித்துள்ளார். 

அதில், உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயன்தாரா அளித்த பதில், அப்போ இல்ல இப்ப வரைக்கும் விமர்சனங்கள் வந்திட்டு இருக்கு. ஒவ்வொரு படத்துலயும் ஒன்னு சொல்றாங்க, உடல் எடை கூடிட்டா, எடைய குறைச்சிட்டா எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டே இருப்பாங்க. எது பண்ணாலும் தப்பா ஆகிடுது. என் இயக்குனர்கள் என்கிட்ட என்ன சொல்றாங்களோ அதை நான் பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன் என்றார். இப்படம் நாளை டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website