எலான் மஸ்க் முதல் முகேஷ் அம்பானி வரை ஏழையா இருந்தா எப்படி இருக்கும்?வைரல் புகைப்படங்கள்

April 10, 2023 at 1:51 pm
pc

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்படும் பல்வேறு விதமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படி சமீபத்தில் ஜோ ஜான் முள்ளூர் என்ற AI கலைஞர் ஒருவர் காந்தி, இயேசு, மார்க்ஸ் உட்பட பல தலைவர்களின் Selfie புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி அது வைரலானது. 
அவரை தொடர்ந்து மைசூரை சேர்ந்த கோகுல் என்ற கலைஞர் ஒருவர் உலக பணக்காரர்களான அம்பானி, எலான் மஸ்க் போன்றவர்கள் ஏழைகளாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்து AI படங்களை வெளியிட்டுள்ளார் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகின் பழமையான மற்றும் பெரிய கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் சிஇஓ பில்கேட்ஸ். உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸின் சொத்து மோதிப்பு 10,996 கோடி அமெரிக்க டாலர்களாம். அவரைத்தான் AI தொழில்நுட்பம் மூலமாக பரம ஏழை போல காட்டியிருக்கிறார் கோகுல்.

டொனால்ட் டிரம்ப் (Donald Trump)

அமெரிக்காவின் 45வது அதிபராக இருந்து உலகையே கொஞ்சம் உலுக்கி சென்றவர் டொனால்ட் டிரம்ப். அவர் அரசியலை தாண்டி அடிப்படையில் பிஸ்னஸ் செய்பவரும் கூட..அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சொத்து மதிப்பு உள்ளவரை வயதான ஏழை தாத்தா போல காட்டியிருக்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

முகேஷ் அம்பானி (Mukesh Ambani)

இந்தியாவின் முதன்மை பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனங்களின் ஓனருமான முகேஷ் அம்பானி 10.4.2023 நிலவரப்படி உலக பணக்காரர் பட்டியலில் 13ம் இடத்தை வகித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்து இடத்திற்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி இவரது சொத்துமதிப்பு 84.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மார்க் ஜுக்கர்பர்க் (Mark Zuckerberg)

முகநூலின் சிஇஓ மற்றும் உலக பணக்காரர் பட்டியலின் முன்னணி பிரபலமுமான மார்க் ஜுக்கர்பர்க்கை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர் 10.4.2023 நிலவரப்படி உலக பணக்காரர் பட்டியலில் 15ம் இடத்தை வகித்து வருகிறார். இவரது சொத்து நிகர மதிப்பு 77.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகின் முதல் 30 பணக்காரர்களில் மிகவும் வயது குறைந்தவர் மார்க் மட்டும்தான். இவருக்கு வயது 38 ஆகிறது. அவரை ஏதோ நமது பக்கத்து வீட்டில் விளையாடும் சிறுவன் போல காட்டியுள்ளது AI தொழில்நுட்பம்.

வாரன் பஃப்பட் (Warren Buffett)​

ஆப்பிள், கோகோ கோலா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பிரதான பங்குகளை தனது கையில் வைத்திருக்கும் உலகின் மிக வெற்றிகரமான 92 வயது பில்லியனர் தான் வாரன் பஃப்பட். தற்போது 10.4.2023 நிலவரப்படி உலக பணக்காரர் பட்டியலில் 6ம் இடத்தை வகித்து வருகிறார் வாரன் பஃப்பட். இவரது சொத்து நிகர மதிப்பு 109.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகின் முதல் 45 பணக்காரர்களில் இவர்தான் அதிக வயதான மூத்த பணக்காரர் ஆவார்.

​ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos)​

உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் மொபைலின் ஒரு கிளிக் மூலம் நீங்கள் நினைத்ததை வர வைக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரரான ஜெஃப் பெஸோஸையும் கோகுல் விட்டு வைக்கவில்லை. 10.4.2023 நிலவரப்படி உலக பணக்காரர் பட்டியலில் 125.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்போடு 3ம் இடத்தை வகித்து வருகிறார் ஜெஃப் பெஸோஸ்.

எலான் மஸ்க் (Elon Musk)

வைரல் மன்னன் என்று இவரை குறிப்பிட்டால் மிகையாகாது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னாலும் சரி, வாங்கிய பிறகும் சரி அதில் ட்ரெண்டில் இருப்பவர் இவரே. சமீபத்தில் கூட ட்விட்டர் லோகோவை நாயாக மாற்றி ட்ரெண்ட் செய்து கொண்டிருந்தார். உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடத்தில் இளையவரானவர் 51 வயது மஸ்க். நீண்ட நாட்களாக முதல் ரேன்கில் இருந்து வந்த மஸ்க் 10.4.2023 நிலவரப்படி உலக பணக்காரர் பட்டியலில் 2ம் இடத்தை வகித்து வருகிறார். இவரது சொத்து நிகர மதிப்பு 187.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website