ஒரே இடத்தில் ஷூட்டிங்.. 2 படங்களிலும் ஒரே நாயகி.. ஜெயம் ரவி – கார்த்தி ஆச்சரிய சந்திப்பு..!

March 12, 2024 at 10:08 am
pc

ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் ஒரே இடத்தில், ஒரே படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவி நடித்து வரும் ’ஜெனி’ மற்றும் கார்த்தி நடித்து வரும் ‘வா வாத்தியாரே’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்த நிலையில் இருவரும் எதிர்பாராத வகையில் சந்தித்துக் கொண்டனர். ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இருவரும் அட்டகாசமாக நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இருவரும் தனித்தனியாக நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்டது இருவருக்குமே எதிர்பாராத ஒரு ஆச்சரியமாக இருந்தது.

அதுமட்டுமின்றி ’ஜெனி’ மற்றும் ’வா வாத்தியாரே’ ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பதும் ஒரு ஆச்சரியத்தக்க ஒற்றுமையாக கருதப்படுகிறது.

ஜெயம் ரவி, கார்த்தி சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருதரப்பு ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ’இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்று கமெண்ட் பதிவு செய்து தங்கள் விருப்பத்தை தெரிவித்து வரும் நிலையில் ரசிகர்களின் விருப்பத்தை ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் பூர்த்தி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website