ஓடிடியில் ‘மைக்கேல்’ – வெளிவந்த அப்டேட்!

February 20, 2023 at 9:35 pm
pc

சந்திப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோர் நடிப்பில் வெளியான மைக்கேல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் வெளியான புரியா புதிர், ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படங்களை இயக்கியவர்தான், ரஞ்சித் ஜெயக்கொடி.

இவர் இயக்கத்தில் கடந்த ஜனவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மைக்கேல்’. சந்தீப் கிஷன், திவ்யான்ஷா கௌசிக், விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இப்படம், ரசிகர்களிடையே அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மைக்கேல் படம் ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வருகிற 24-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website