கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலம்: நெஞ்சை பதற வைக்கும் தகவல்!

October 28, 2022 at 9:14 pm
pc

ராஜஸ்தான் மாநிலத்தில் 8 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சொத்து தகராறுகளை தீர்ப்பதற்காக சாதி பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவர் பஞ்சாயத்துக்கள் நடத்தப்படும் போது கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினர் பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர். அது மட்டும் இல்லாமல் சேர்த்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலமிடப்படுகின்றனர்.

இந்த ஏலத்தை சட்டபூர்வமாக முத்திரைத்தாள்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கைமாற்று விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. 

மேலும் சிறுமிகளை ஏலம் இடுவதை தடுத்தால் அவர்களின் தாய்மார்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்று நிபந்தனையும் உள்ளது. அதன்படி ஒரு தாய் ரூ.6 லட்சத்திற்காக தனது மகளை மூன்று முறை விற்ற நிலையில், சிறுமி 4 முறை கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுவெளியில் தெரிய வர ஊடகங்களில் இருந்து இது போன்ற செய்திகள் வந்ததையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தது.

இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இது போன்ற கொடூரமான சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் தலைமை செயலருக்கு என்.எச்.ஆர்.சி.நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து மாநில தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பஞ்சாயத்துக்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்பதை அறிய அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ராஜஸ்தான் காவல்துறை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து உண்மை அறிக்கையை 7 நாட்களில் தாக்கல் செய்ய ராஜஸ்தான் மகளிர் ஆணையம் இன்று மாநில போலிஸ் டிஜிபி மற்றும் பில்வாரா மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் மந்திரி பிரதாப் கச்சரியாவாஸ் கூறியது, இந்த சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை தேவை. இது போன்ற தகவல்களை வரும்போது விசாரணை நடக்கும் வரை உண்மையை அறிய முடியாது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண், குழந்தைகள் விற்பனை நடப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website