கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

May 22, 2024 at 5:19 pm
pc

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட கூடியவர்கள் தான். மற்ற விலங்குகளுக்கு இல்லாதத ஒரு அற்புதமான உணர்வு தான் பாசம். அன்பு மற்றும் பாசம் என்பன மனிதர்களின் அடிப்படை தேவைகளுள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.மனிதன் ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் மிகவும் மிக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பாசம் இன்றியமையாதது. மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.

அந்த வகையில் கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் என்பது காமத்தை மட்டுமே சார்ந்தது அல்ல, அது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே கருதப்படுகின்றது.

கட்டிப்பிடித்தல் மன இறுக்கத்தை குறைக்கும் என்பது, இங்கு பலருக்கும் தெரிந்திருக்காது. கட்டியணைப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த வகையில் கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பில் முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே கட்டியணைக்கும் போது நம் உடலில் ஆக்ஸிடைசின் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகமாகின்றது. அதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

மன அழுத்தம் அல்லது உடல் சோர்வு ஏற்படும் போது மனதிற்கு பிடித்த நபரை அணைப்பதால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு கிடைப்பதாக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றது.

மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைக்கும்போது உடலில் சுரக்கும் கார்டிஸால் சுரப்பினால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையயும் என்பது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் கூட அணைப்பு முக்கியமான தேவையாகவுள்ளது. இது தனிமை உணர்வை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

குழந்தைகளின் மன வளர்ச்சி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் பெற்றோர் குழந்தைகளுடன் தொடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகின்றது.

குழந்தைகளை பெற்றோர் கட்டியணைக்கும் பொது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது. உண்மையில் கட்டியணைத்தல் தியானம் செய்வதற்கு சமனான மன அமைதியை கொடுக்கும்.

இது நம் மனதில் மகிழ்ச்சியை தூண்டும். கட்டிப்பிடித்தல் என்பது உண்மையில் ஒரு வைத்தியம் எனவே கூறவேண்டும். இதனால் தசைகளில் வலுவடைகின்றது.

இதனால் உடல் எப்பொதும் இளமையாக இருக்க துணைப்புரிகின்றது. அடிக்கடி மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைப்பதால் மனதில் ஏற்படும் தேவையற்ற பய உணர்வுகள் நீங்கும்.இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

கட்டிப்புடி வைத்தியத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதனால் அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பிற வைரல் நோய் தொற்றகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

கணவன் மனைவி உறவில் நாட்டம் இல்லாதவர்களுக்கும் கூட கட்டிப்பிடி வைத்தியத்தின் காரணமாக துணையின் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website