கறி சாப்பிடுவார்!!ஜாதியை வைத்து ஒதுக்க பார்த்தார்கள்…இசையால் முன்னுக்கு வந்தார் இளையராஜா! -பாரதிராஜா சொன்ன விஷயம் ..


தமிழ் சினிமாவில் பெரிதும் மதிக்கப்படும் நபர்களில் இயக்குநர் பாரதிராஜா முக்கியமானவர். மூத்த இயக்குநர் என்பது மட்டும் இல்லாமல், தனது படைப்பால் தனது இளைமைக் காலத்தில் இருந்தே திரைத்துறையில் தனக்கென தனி மதிப்பை உருவாக்கிக் கொண்டவர். சமீப காலங்களாக படங்கள் இயக்குவதில் இருந்து விலகி, தனது மனதைக் கவரும் படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், இளையராஜா முதன் முதலாக இசை அமைக்க வந்தபோது, ”என்னய்யா, பள்ளன், பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்” எனக் கூறினார்கள் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, இசை மீது தனக்கு இருந்த ஆர்வத்தால், தானே இசை வாத்தியங்களை இசைத்தும், சில இசைக் கருவிகளை எவ்வாறு இசைப்பது எனக் கற்றுக்கொண்டும், தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து, இன்றைக்கு தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறி நிற்கின்றார். 1000க்கும் மேற்பட்ட படங்கள், 10000க்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் என இளையராஜா இன்றைக்கும் இசை தொடுத்துக்கொண்டே உள்ளார்.
அவரின் வளர்ச்சியைத் தடுத்து அவரை ஒரு இடத்தில் முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், சிலர் ஈடுபட்டனர். ஆனால் அவையெல்லாம் சிங்கத்தை சிலந்தி வலையில் அடைப்பது போன்றது என நீரூபித்து இன்றைக்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியங்களைக் கொடுத்துத் கொண்டே இருக்கின்றார் இளையராஜா. இன்றைக்கு அனைவராலும் அன்னார்ந்து பார்க்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை, சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னர், மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது என பலர் கூறினாலும், பாரதிராஜா அந்தப் பேட்டியில் கூறியதை இதில் பார்க்கலாம்.
அறிமுகம்: பாரதிராஜா கூறியதாவது, “ நான் முதன் முதலில் ஹெல்த் இன்ஸ்பெக்ட்டராகத்தான் இளையராஜாவின் ஊருக்குப் போனேன். அப்போதுதான் அவரது அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர்கள் எங்கு இசைக் கச்சேரி நடத்தச் சென்றாலும் நானும் அவர்களுடன் சென்றுவிடுவேன். எனக்கும் இளையராஜா மற்றும் அவரது சகோதர்களுக்கு சினிமா மீது ஆர்வம். நான் முதலில் சென்னைக்கு வந்து சுழலை ஓரளவுக்கு ஏதுவாக மாற்றிக்கொண்டு, இளையராஜாவையும் அவரது சகோதர்களையும் கடிதம் போட்டு பண்ணைபுரத்தில் இருந்து இங்கு கிளம்பி வரச் சொன்னேன்.
அதன் பின்னர்தான் வாய்ப்பு தேடினார்கள். அப்போதெல்லாம் இளையராஜா நன்றாக கறி சாப்பிடுவார். அவருக்கு தலைவலி வந்தால் அதனைச் சரி செய்ய கறி சாப்பிடுவார். நான் அப்போத் ரங்கநாதன் தெருவில் ரூம் எடுத்து தங்கி இருந்தேன். அங்குதான் இவர்களையும் தங்க வைத்தேன். நாங்கள் தங்கி இருந்த பகுதியில் பிராமணர்கள் அதிகம் என்பதால், எங்களை ரூமை காலி செய்யச் சொன்னார்கள். அதன் பின்னர் தேனாம்பேட்டையில் வந்து தங்கிம்னோம்.
பள்ளன், பறையன்: இளையராஜா நாடகங்களுக்கு இசை வாசித்து வந்தார். நான் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தேன். இருவரும் இடைப்பட்ட காலங்களில் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தோம். பஞ்சு அருணாசலத்திடம் அறிமுகம் செய்து வைத்தேன். இளையராஜாவின் திறமையைப் பார்த்த அவர் மிரண்டுபோய், யனையைக் கவுத்திவிடுவான் (எம்.எஸ்.விஸ்வநாதனை ஓரம்கட்டிவிடுவார்) எனக் கூறினார். அன்னக்கிளி படம் மபெரும் ஹிட் படமாக மாறியது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் எங்கு திரும்பினாலும் ஒலித்தது. அந்த காலகட்டத்தில் சினிமாவில் இருந்த சில நடிகர்கள், சினிமாவில் மிகவு உயரிய பொறுப்பில் இருந்த உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள், “ என்னய்யா, பள்ளன், பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான்” எனக் கூறினார்கள், என பாரதிராஜா அந்த பேட்டியில் கூறியுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.