காதலி கொடுத்த ஜூஸ் பலியான வாலிபர்!! அதிர்ச்சி காரணம்

October 28, 2022 at 9:23 pm
pc

திருவனந்தபுரம் அருகே பாரசாலா மால்யங்கரையை சேர்ந்தவர் ஜியோ. இவருடைய மகன் ஷரோன் ராஜ் (வயது 23) அங்குள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர் கடந்த 14-ம் தேதி, ஷரோன் ராஜ்க்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவரின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவும் எனக் கூறி அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதன்படி வீட்டுக்கு வந்த ஷரோன் ராஜ்ஜின் உடல் மோசமடைந்து அவரால் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு நடைபெற்ற சோதனையில் அவருடைய சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து வருவதும், உள் உறுப்புகளின் செயல்பாடும் சீர்குலைவதும் கண்டறியப்பட்டது. மேலும், அவரின் உடலில் ஆசிட் போன்ற ஒன்று கலந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெண்டிலேட்டரரில் இருந்த ஷரோன் ராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் ஷரோன் ராஜ்ஜின் நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது ஷரோன் ராஜ் அவரின் காதலி வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே ஷரோன் ராஜ்ஜின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஷரோன் ராஜ்ஜின் காதலி கொடுத்த ஜூஸை குடித்த பின்னரே இந்த நிலை ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஷரோன் ராஜ்ஜின் வாக்குமூலத்திலும் அது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே எதையும் உறுதிசெய்ய முடியும் என போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது,.இந்த சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website