குழந்தைகளின் உடல் பருமனுக்கான காரணங்கள் காரணங்கள் என்னென்ன …?

December 28, 2022 at 8:46 am
pc

குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்பட பெற்றோர்களை முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சசெக்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் உலகம் 35 முதல் 40 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனை தங்களின் பெற்றோர்கள் மூலம் மரபு ரீதியாகவே ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே சுமார் 3 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உடல் எடை குறியீட்டில் எனப்படும் பி எம் ஐ குறியீடு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 முதல் 40 சதவீத குழந்தைகள் மரபணு ரீதியாகவே உடல் பருமனுக்கு ஆளாவதாகக் கூறப்பட்டுள்ளது.

உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள் தான் உடல் பருமனுக்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நொறுக்க தீனிகள் மற்றும் மைதா நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது. ஓடி விளையாடும் விளையாட்டுகள் குறைந்து போனது.

எல்லா விளையாட்டுகளும் வீடியோ கேமாக மாறிய நிலை. வீட்டிற்கு வெளியே செல்வது குறைந்து வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது. ஹார்மோன் ஊசி செலுத்தப்பட்ட சிக்கன் உணவுகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை உண்பது ஆகிய இவனைத்துமே ஒபிசிட்டி எனப்படும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website